மேலும் அறிய

அங்கக வேளாண்மையில் பூச்சி, நோய் தாக்குதலை எதிர் கொள்ள எளிய முறைகள்

அங்கக வேளாண்மையில் பூச்சி, நோய் தாக்குதலை எதிர் கொள்ள எளிய முறைகள்: விவசாயிகளுக்கு வேளாண் துறை விளக்கம்

தஞ்சாவூர்: மனிதர்கள், கால்நடைகள் மற்ற உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவு பொருள்களில் பூச்சிக்கொல்லி எச்சம் எனும் விஷ மருந்துகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்தி விளைச்சலை மேம்படுத்த நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்துகளே இதற்கு முக்கிய காரணமாகும்.

எனவே இரசாயன பூச்சிக்கொள்லி மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையில் எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக விளைச்சல் எடுக்கலாம் என்ற வழிமுறைகளை விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விளக்கி உள்ளார்

இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால் பயிர்களுக்கு நன்மை தரும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது இதனால் உணவு பொருள்களின் தரமும் குறைகிறது. பூச்சிமருந்து அடித்து விளையும் உணவு பொருட்களில் 10 சம் நச்சுத்தன்மை உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் பூச்சிகள்,  இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டு பல்கி பெருகுகின்றன.

இவற்றிற்கெல்லாம் இறுதியான தீர்வாக அமைவது அங்கக வேளாண்மையாகும். இதில் இயற்கை யுக்திகளை கையாள்வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பெருமளவு குறைக்கப்படுகிறது.

கோடை உழவு செய்தல்

கோடை உழவு செய்வதால் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள், நோய் பரப்பும் பூசணங்கள் மற்றும் நச்சுயிரி தாக்கிய பயிர் கழிவுகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வந்து வெயிலில் காய்ந்து முழுவதும்' அழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் அடுத்து பயிரிடப்படும் பயிர்களில் பூச்சி மற்றும். நோய்களின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

விதை அளவு மற்றும் விதைநேர்த்தி

பரிந்துரைக்கப்பட்ட விதை அளவுகளையும், நடவு பயிர்களின் அடர்த்தி அளவையும் இடத்திற்கு ஏற்றார்போல பின்பற்ற வேண்டும். விதைப்பதற்கு முன்பாக உயிர் பூசணங்களான சூடோமோனாஸ்,  டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் போன்றவற்றை கொண்டு விதைநேர்த்தி செய்வதால் வேரழுகல் மற்றும் வாடல் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

கலப்பு பயிர் சாகுபடி: இந்த முறையில் ஒரே பயிரை பயிரிடாமல் பல்வேறு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

ஊடுபயிர் சாகுபடி: முக்கிய பயிருடன் ஊடுபயிர்களை பயிரிடுவதால் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

சோளம் – துவரை - கதிர் நாவாய்பூச்சி
சோளம் – தட்டைப்பயிறு- தண்டு துளைப்பான்
துவரை – சோளம்- தத்துப்பூச்சி காய்ப்புழு
பாசிப்பயறு – சோளம்- தத்துப்பூச்சி
பொறிப்பயிர்களை பயிரிடுதல்
பொறிப்பயிர் மூலம் பூச்சிமேலாண்மை செய்வது தற்போது அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இங்கு முக்கிய பயிர்களுடன் வரப்பு ஓரங்களிலோ அல்லது நடுவிலோ பொறிபயிர்களை பயிரிவதால் இவை பூச்சிகளை கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்த பாதுகாக்கிறது.

புகையிலை, பருத்தி, நிலக்கடலை – ஆமணக்கு- புகையிலை வெட்டுப் புழு
மக்காச்சோளம் – சோளம்- குருத்து ஈ, தண்டு துளைப்பான்
பருத்தி – வெங்காயம், பூண்டு – இலைப்பேன்
முட்டைகோஸ், காலிபிளவர் – கடுகு - வைர முதுகு வண்டு
பருத்தி – செண்டு மல்லி- பச்சைக்காய்ப்புழு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget