மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஒர் கீழ் வெண்மணியா....? - விவசாயி கூலி தொழிலாளர்கள் போராட்டம்..!

மேல பருத்திகுடி கிராமத்தில், நேரடி நெல் விதைப்பு செய்ய, கூலி விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வில் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவில் மேல பருத்தி குடி கிராமம் உள்ளது. இங்கு நில உரிமைதாரர்களுக்கும், கூலி விவசாய தொழிலாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விவசாய கூலி பிரச்னை நடந்து வருகிறது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நில உரிமையாளர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து உள்ளார். இதனை எதிர்த்து விவசாய கூலி தொழிலாளிகள் அந்த நிலத்தில் இறங்கி, நெல் விதைகளை மிதித்து நாசப்படுத்தி உள்ளனர்.


மயிலாடுதுறையில் ஒர் கீழ் வெண்மணியா....? - விவசாயி கூலி தொழிலாளர்கள் போராட்டம்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?’ ஆலோசனை கூட்டத்திற்குப் பின் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

இதனால் மற்ற நில உரிமையாளர்கள், முதல்வரே இந்த மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பை தொடங்கிவைத்து உள்ளார். ஆனால், விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பதை தடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு கொடுத்திருந்தனர். இதையொட்டி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும், நேரடி நெல் விதைப்பு செய்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாய கூலிகள் ஒத்துகொள்ளவில்லை. 

 


மயிலாடுதுறையில் ஒர் கீழ் வெண்மணியா....? - விவசாயி கூலி தொழிலாளர்கள் போராட்டம்..!

திண்டுக்கல் - மயிலாடுதுறை, நெல்லை- ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

மேலும், நேற்று மற்றொரு நில உரிமையாளர் தனது 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய பாதுகாப்பு கோரியதால், காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் தங்கவேல் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதை தடுக்க வந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு இடையூறு செய்து பிரச்னையில் ஈடுபட்ட  50 விவசாய கூலி தொழிலாளர்கள் கைது  செய்யப்பட்டனர்.


மயிலாடுதுறையில் ஒர் கீழ் வெண்மணியா....? - விவசாயி கூலி தொழிலாளர்கள் போராட்டம்..!

Alia Bhatt Pregnancy Reactions: கர்ப்பமான அலியா பட்.. குவியும் வாழ்த்துகள்.. பறக்கும் ஹார்டின்கள்!

மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட ஏழை கூலி விவசாய தொழிலாளர்கள் 44 பேர், ஆண், பெண், குழந்தைகள் என வித்தியாசமின்றி கல்நெஞ்சக்காரர்களால் பூட்டிய வீட்டினுள் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி இன்றளவும் அது மாறாத வடுவாக இருந்து வருகிறது. தற்போது மீண்டும் அதே போன்று சூழல் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சத்து சேர்ந்தால் செழிக்கும் பருத்தி… செல்வம் தரும் விவசாயம்: வேளாண்துறை அட்வைஸ்
சத்து சேர்ந்தால் செழிக்கும் பருத்தி… செல்வம் தரும் விவசாயம்: வேளாண்துறை அட்வைஸ்
சோயா சாகுபடி வளர்ப்போம்: ஆரோக்கிய உணவும், அதிக வருமானமும்
சோயா சாகுபடி வளர்ப்போம்: ஆரோக்கிய உணவும், அதிக வருமானமும்
குறுவை களமிறங்கும் நேரம்: தஞ்சாவூருக்கு வேகமாக வந்த உர மூட்டைகள்
குறுவை களமிறங்கும் நேரம்: தஞ்சாவூருக்கு வேகமாக வந்த உர மூட்டைகள்
Madurai Hc ; மலைப்பகுதியில் தனிநபர் அணை கட்டிய விவகாரம்.. நேரில் சென்று ஆய்வு செய்ய போவதாக அறிவிப்பு !
Madurai Hc ; மலைப்பகுதியில் தனிநபர் அணை கட்டிய விவகாரம்.. நேரில் சென்று ஆய்வு செய்ய போவதாக அறிவிப்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
Modi on UAE Attack: 'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Thirumavalavan:
Thirumavalavan:"இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவு!" திருமா கொடுத்த ட்விஸ்ட்! தவெகவுடன் கூட்டணி?
Modi Vs Rahul: “மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
“மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
Embed widget