Biryani man arrest | பிரியாணி மேன் கைது! சைபர் க்ரைம் அதிரடி! நடந்தது என்ன?
பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தின் வரும் அபிஷேக் ரவி என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இர்ஃபானின் குழந்தையை குறிப்பிட்டு பேசியது, உருவக்கேலி செய்தது என பிரியாணி மேன் பேசியவை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் தயாளு டிசைன்ஸ் என்ற பேஜ் மூலம் டெய்லரிங் மற்றும் பேசன் டிசைனிங் பற்றி பேசிவருபவர் மீதும் விமர்சனங்களை முன்வைத்ததற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை பேசப்பட்டு வரும் நிலையில் ஜூலை 29-ஆம் தேதி பிரியாணி மேன் சேனலை நடத்திவரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர்கள் அபிஷேக்கின் அம்மாவிற்கு ஃபோன் செய்ததைத் தொடர்ந்து அவர் அபிஷேக்கை காப்பாற்றியுள்ளார்.
மற்றவர்களை பற்றி தவறாக பேசுவது மட்டுமல்லாமல் லைவ் வீடியோவிலேயே தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேனை கைது செய்ய வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.