Varun Kumar And Vandita Pandey | கெத்து காட்டும் IPS COUPLE ஒரே நாளில் PROMOTION வருண்குமார் - வந்திதா பாண்டே
ஐபிஎஸ் ஜோடிகளான வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு பெற்று கவணம் பெற்றுள்ளானர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி டி.ஐ.ஜியாக வருண்குமாரும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டேவும் நியமனம் செய்யபட்டுள்ளனர். அருகருகே உள்ள திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்.பிக்களாக பணியாற்றி வந்த இருவரும் இனி திருச்சி - திண்டுக்கல் சரக டிஐஜிகளாக பணியாற்ற உள்ளனர்.
திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் வருண்குமாருக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக மாறினார். பொதுவாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட மற்ற போலீஸ் அதிகாரிகள் தயங்கும் நிலையில், அதனை உடைத்து பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளித்து அதை நிவர்த்தி செய்வது முதல் மிரட்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை பின்னங்கால் பிடரியில் பட ஓட வைப்பது வரை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக மனதில் பட்டதை பதிவிட்டு வந்தார் வருண்குமார்.நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது, பிரபல யூடுபர் சவுக்கு சங்கர் கைது, திருச்சியை ஆட்டிப்படைத்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் என தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் ‘இதுதாண்டா போலீஸ்” என பலரையும் வியப்பில் ஆழ்த்தினார் வருண்குமார். இந்தச் சூழலில் தான் திருச்சி டி.ஐ.ஜியாக வருண்குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான், தற்போது, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் வந்திதா பாண்டே. அவரது நேர்மைக்கும், துணிச்சலுக்கும் கிடைத்த வெகுமதியாகவே இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது.