(Source: ECI/ABP News/ABP Majha)
Vinayagar Chaturthi : கணபதி தரிசன திருவிழா.. தானிய விநாயகருக்கு வரவேற்பு விநாயகர் சதுர்த்தி SPECIAL
சேலத்தில் தமிழக அரசின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'கணபதி தரிசனம் திருவிழா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது
தானிய விநாயகர் சிலைகள் ஒவ்வொரு ராசியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது
விநாயகர் சிலைகளை வாங்குவதற்காக குவியும் மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 750 களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை தயாரித்து மாணவ மாணவிகள் சாதனை.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பசுமை விதை விநாயகர் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு தமிழக முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 30 நிமிடத்தில் களிமண்ணை கொண்டு பல்வேறு வடிவிலான விதை விநாயகர் சிலைகளை வடிவமைத்தனர். தொடர்ந்து இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் வைத்து வழிபட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதோடு, மரம் வளர்ப்பதும் ஊக்குவிக்கப்படுவதாக மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.