Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!
என்ன அமுதா இப்படி பண்ணிட்டீங்களே? என்று கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணத்தில் கடுமையான அப்சட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின். இந்நிலையில் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஐ மாற்றலாமா என்ற பேச்சுக்கள் கோட்டை வட்டாரத்தில் பரபரத்து வருகின்றன..
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்றத்தை கூட்டிய ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க தெம்பாக தயார் நிலையில் காத்திருந்தார். ஆனால் சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே கள்ளக்குறிச்சி விஷாராயர் மரணம் விவகாரம் வெடித்து விஸ்வரூபம் எடுத்தது, ஸ்டாலினின் பிலானை புஸ்வானம் ஆக்கிவிட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க, கூட்டணி கட்சியான விசிக்காவும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதனால் நம்பிய சிலர் இப்படி செய்து விட்டார்களே என்று கடுமையான கோபத்தில் உள்ள ஸ்டாலின் மனசோர்வுடன் காணப்படுகிறாராம். அதில் ஹிட்லர் ஸ்டில் இருப்பவர் தான் களப்பணிக்கு பெயர் போன அமுதா ஐஏஎஸ்.
முதல்வர் ஸ்டாலினின் கீழ் வரும் உள்துறையின் செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் இன் கீழ்தான் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கம் ஆகியவை வருகின்றன. இந்நிலையில் இது இரண்டிலுமே கோட்டை விட்டுவிட்டாரே அமுதா ஐஏஎஸ் என்று வருத்தத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளின் தரப்பில் இருந்தும், கள்ளச்சாராய மரணத்தில் அதிக நடவடிக்கைகள் தங்கள் பக்கமே பாய்கிறது, ஆனால் உண்மையில் அதற்கு பொறுப்பாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் மீதோ அல்லது வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் பாய்வதில்லை என்ற அதிருப்தி அவர்கள் மத்தியில் நிலவுவதாக தெரிகிறது.
மரக்காணம் விவகாரத்தின் போதும் இதே போன்று தான் நடந்ததாகவும், தற்போது கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உயிரிழந்துள்ள விவகாரத்திலும் எஸ் பி சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் எஸ்ஐஎ சட்டம் ஒழுங்கை சேர்ந்த 9 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.
மெத்தனால் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் இருக்கும்போது, கலெக்டர் மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் உட்பட தாசில்தார் விஏஓ போற்ற வருவாய் துறை அதிகாரிகள் வரை யார் மீதும் நடவடிக்கை பாய வில்லை.
அன்றாடம் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பது பொது நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகளை சட்டமூலங்கு போலீசார் சமாளிக்கும் சூழலில், இதற்கும் அவர்களையே பொறுப்பாக்கினாள் எப்படி என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
இதனால் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஐ மாற்றலாமா என்ற விவாதம் தற்போது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.