Vinesh Bajrang Punia Congress |ராகுலின் 2 அஸ்திரங்கள்!பாஜக ஆட்டம் OVER! தட்டித்தூக்கிய காங்கிரஸ்!
மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் வரும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். எனவே ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்தும் பட்லி தொகுதியில் பஜ்ரங் புனியாவும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் அமைப்பு செயலாளராக உள்ள கே.சி. வேணுகோபால் ஆகியோரை அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் முன்னிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் அதிகாரப்பூரவமாக காங்கிரஸின் இணைந்தனர். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வினேஷ் போகத், "காங்கிரஸ் கட்சிக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேம்.
கெட்ட காலங்களில் நம்முடையவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம் என சொல்வாஎகள். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன. பெண்களுடன் நின்று இறுதி வரை போராடத் தயாராக உள்ள ஒரு கட்சியில் நான் இணைந்ததில் பெருமை அடைகிறேன்.சண்டை இன்னும் தொடர்கிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. கோர்ட்டில் இருக்கிறது. அந்த போராட்டத்திலும் வெற்றி பெறுவோம். இன்று கிடைத்திருக்கும் புதிய தளத்தின் மூலம் தேச சேவைக்காக பாடுபடுவோம். நாங்கள் எப்படி முழு மனதுடன் விளையாடினோம், எங்கள் மக்களுக்காக எங்களால் முடிந்ததைச் செய்வோம்.
நான் என் சகோதரிகளிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் அவர்களுடன் இருக்கிறேன். உங்களுக்கென்று யாரும் இல்லை என்றாலும் நான் இருப்பேன். காங்கிரஸ் கட்சி இருக்கும். நான் இதை உணர்ந்தேன். நாங்கள் நிச்சயமாக இருப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என உருக்கமாக பேசியுள்ளார் வினேஷ் போகத்
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஹரியானா தற்போது ஆம் ஆத்மியிடம் உள்ளது கடந்த 10 ஆண்டுகளாக அங்கு காங்கிரஸால் தடம் பதிக்கமுடியவில்லை. இந்நிலையில் நேரம் பார்த்து காய் நகர்த்திய ராகுல், வினேஷ் மற்றும் பஜ்ரங் புனியாவை தன் பக்கம் இழுத்து கட்சிக்கு பலத்தை கூட்டியுள்ளார். இதன் தாக்கம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.