மேலும் அறிய

Vijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..

பெரியாருக்கு முதல் மரியாதை,கட் அவுட்டில் அம்பேத்கர்,எலுமிச்சை, திரிசூலம், பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை,, பூஜைக்கு தலைகாட்டாமல் தொண்டர்களுக்கு முதல் கடிதம்..என்ன சொல்ல வருகிறார் தவெக தலைவர் விஜய்? 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெற உள்ளது. தவெக மாநாட்டின் முதல் பூஜை இன்று காலை பிரம்ம முகுர்த்தத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாலக்கால் ஊன்ற வெகுவிமரிசையாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. நடிகனாக இருந்து தற்போது அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார். கட்சி பெயர்,கொடி,பாடல் என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தினார் விஜய். ஆனால் இவரது கொள்கை நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை ரகசியமாக உள்ளது. இந்நிலையில் பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் எண்ட்ரிக்கு மாஸான ஒரு அடையாளத்தையும் கொடுத்தார்.

மேலும் தனது ஒவ்வொரு அறிக்கையிலும் பெரியாரை முன்னிலைப்படுத்தி பகுத்தறிவை பிரகடனப்படுத்தினார். மேலும் சாதிய வேற்றுமையை ஒழிப்போம் என குரல் கொடுத்தார்.இப்படியான நிலையில் பெரும்பான்மையினர் எதிர்பார்க்கும் திராவிட ரூட்டில் தான் விஜய் பயணிக்கிறார் என விமர்சனங்கள் வந்தது. 

ஆனால் முதல் மாநாட்டின் பூஜை நிகழ்வு விமர்சன வலையில் சிக்கியுள்ளது. ஒருபுறம் பகுத்தறிவாளன் பிம்பத்தை உருவாக்கி வைத்துவிட்டு மறுபுறம் பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்ற மாநாடு பூஜை! திருப்பதி வெங்கடாஜலபதி, லட்சுமி உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள், எலுமிச்சை, திரிசூலம் என சனாதன முறைப்படி அரங்கேறியது. 
4 மணிக்கு தொடங்கிய அந்த பூஜையைத் தொடர்ந்து, 4.35 மணிக்கு மாநாட்டிற்கான பந்தக்காலை கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த் தலைமையில் நட்டனர்.

அதன் பிறகு தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்கள், தர்கா, தேவாலயம் ஆகிய இடங்களில் இருந்து மாநாட்டிற்காக அர்ச்சனை செய்து எடுத்து வந்த நீரை பந்தக்காலில் ஊற்றி வழிபட்டனர்.

பகுத்தறிவும் பேசும் மக்களை ஒருபுறம் கவர் செய்துவிட்டு இப்படி மற்ற மக்களையும் ஆறுதல் படுத்தியுள்ளார் விஜய். ஆனால் இந்த பூஜையில் விஜய் கலந்துகொள்ளாதது மற்றொரு ட்விஸ்டை வைத்துள்ளது. ஆக நேரடியாக சனாதன பார்வையில் மக்களிடம் தென்படக்கூடாது என முடிவெடுத்த விஜய் நிர்வாகிகளை வைத்து இதனை பக்காவாக நடத்தி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் பூஜையில் பங்கேற்காதது விமர்சனத்திற்குள்ளான நிலையில், உடனடியாக தொண்டர்களுக்கு லெட்டர் போட்டு குஷிபடுத்தியுள்ளார். 
ஜோசப் விஜய் அடையாளத்தையும் ப்ளஸ்ஸாக பயன்படுத்திக்கொண்டு மறுபக்கம் பகுத்தறிவு, பெரியார், சனாதன எதிர்ப்பு என பல அரசியல் மொழிகளையும் முன்னிலைப்படுத்தி அனைத்து மக்களையும் தன்வயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் விஜய்.

இப்படி அரசியலை கவனமாக கையாள வேண்டும் என்ற நோக்கத்துடன் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். எனினும் மாநாட்டில் தனது கொள்கை, நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் விஜய்யின் பேஸ்மெண்ட் ஸ்டராங்கா வீக்கா என்பதை கணிக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்

அரசியல் வீடியோக்கள்

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy Anand
TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy Anand
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget