TVK Flag | யாரை சீண்டுகிறார் விஜய்? த.வெ.க கொடி சொல்லும் SECRETS
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகார்ப்பூர்வ கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் கொடி பின்னால் ஒரு பெரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது .
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை அதிரடியாக மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நிதானமாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகளே இருப்பதால் நடிகர் விஜய் இனி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளார். அதற்கு முதல்படியாக இன்று தனது கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
பொதுவாக எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது கொடியை அறிமுகப்படுத்தினாலும் அந்த கொடிக்கு பின்னால் ஒரு கதை மற்றும் அர்த்தம் இருக்கும். அந்த வகையில் விஜய் அறிமுகப்படுத்த்திய தவெக கொடியிலும் ஒரு கதை இருக்கிறது.
சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த கொடியில் இரண்டு யானைகள் பீறிட்டு வெற்றி முழக்கத்தை காட்டும் வகையில் நிற்க, நடுவில் வாகை மலர் இருக்க அதை சுற்றி 28 நட்சத்திரங்கள் நீலம் பச்சை நிறத்தில் இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை குறிக்கிறது. மேலும் கீழே உள்ள 5 ஐந்து நட்சத்திரங்கள் தென் மாநிலங்களை குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.
தனது கட்சியின் பெயரைப்போலவே வெற்றியை குறிக்கும் அம்சங்களை கட்சி கொடியிலும் இடம்பெற்றிருக்க செய்திருக்கிறார். குறிப்பாக யானை மற்றும் வாகை மலர் இரண்டும் வெற்றியின் சினங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும் வாகைப்பூ என்பது பண்டைய காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிப்பெற்றால் அவர்களுக்கு வாகை மலர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் த.வெ.க தலைவர் விஜய்யின் பெயரும் வெற்றி என்ற அர்த்தத்தை தருகிறது.
எனவே, தான் 2026ஆம் ஆண்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த வெற்றியின் சினங்களை விஜய் வைத்திருக்கிறாரோ என்ற பேச்சும் மக்களிடையே இருந்து வருகிறது.
எது எப்படியோ வெற்றி மையமாக வைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை குறிவைத்து முழுமையாக விஜய் இறங்கி விட்டார் என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றன்ர் என்பது குறிப்பிடத்தக்க