கால்வலிக்க நின்ற மக்கள் ”பிளானை மாத்துங்க ஆனந்த்” ACTION-ல் இறங்கிய விஜய்
நடிகர் விஜய் தனது மக்கள் சந்திப்பிற்கான சுற்றுப்பயணத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தனது மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கினார். திருச்சி, அரியலூரில் அவரை காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை விஜய் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மக்களைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களின் கூட்டம் காரணமாக விஜய்யால் பெரம்பலூர் செல்ல இயலவில்லை. இதனால், பெரம்பலூரில் அவருக்காக நள்ளிரவை கடந்தும் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால், விஜய்யின் சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, விஜய்யின் சுற்றுப்பயணத்தில் ஒரு நாளைக்கு 3 மாவட்டங்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சனிக்கிழமை அவரால் திருச்சியில் இருந்து அரியலூர் செல்வதற்கே அன்றைய தினமே முடிந்துவிட்டது.
இதனால், எஞ்சிய சுற்றுப்பயணத்தில் இனி ஒரு நாளைக்கு 2 மாவட்டங்கள் என்று மாற்றிக் கொள்ளலாமா? என்று தவெக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இதுபோல் ஒவ்வொரு பயணத்தின்போதும் ஒரு மாவட்டத்தை மட்டும் மக்களைச் சந்திக்காமல் வந்தால் மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் விஜய் மீது அதிருப்தி உண்டாகலாம் என்று தவெக தலைமை அஞ்சுகிறது.
இதனால், இனி ஒவ்வொரு விஜய்யின் சுற்றுப்பயணத்தை 2 மாவட்டங்கள் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற மாவட்டங்களுக்கான சுற்றுப்பயண தேதியை விரைவில் மாற்ற தவெக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு அரசியலில் அதிர்வலையை உண்டாக்கி வரும் நிலையில், அவரது தற்போதைய திட்டப்படி வரும் டிசம்பர் மாதம் வரை அவரது சுற்றுப்பயணம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணம், ஜனநாயகன் படம் ரிலீஸ் என காய்களை நகர்த்தி வந்தாலும் அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சியினரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், தவெக தரப்பினர் தொடர்ந்து பல கட்சியினருடன் கூட்டணி பேசி வருகின்றனர்.





















