மேலும் அறிய

TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?

தமிழ் நாடு அரசு அதானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழ் நாடு மின்சார வாரியம் அதானி குழுமத்திற்கு டெண்டர் ஒன்றை ஒதுக்க உள்ளதாக  கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி அதானி  மற்றும் அம்பானியின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவி வருவதாகவும் நாட்டு மக்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை என்றும்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.  இதனிடையே தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அதானி சென்னையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில் அதானி குழுமம் மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்திருந்தது.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  உருவாக்கியது. அமெரிக்காவில் சோலார் பவர் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. ஆனால் இதை அதானி குழுமம் அடியோடு மறுத்தது. 

இதனிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளில் அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாக அதானி நிறுவனத்துடன் எந்த வணிகத் தொடர்பும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.  இச்சூழலில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டரிங் திட்டத்தின் டெண்டரை  அதானி குழும நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு TNEB ஒதுக்க உள்ளதாக  thenewindianexpress செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இருப்பினு, ஒப்பந்தம் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

முன்னதாக, RDSS இன் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் சுமார் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ, ஒவ்வொரு பேக்கேஜும் வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கியதாக, நான்கு பேக்கேஜ்களில் இந்த திட்டத்திற்கான டெண்டர்களை ஆகஸ்ட் 2023 இல் TNEB வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிக அனுமதி பெற்ற ஸ்மார்ட் மீட்டர்கள் தமிழ்நாடுதான். ஒவ்வொரு பேக்கேஜுலும்  சுமார் 80 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்படும்.

தொடர்ந்து அதானிக்கும் தமிழ் நாடு அரசுக்கும் திரை மறைவில் உறவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில் தமிழ் நாடு மின்சார வாரியம் அதானி குழுமத்திற்கு டெண்டர் ஒன்றை ஒதிக்கியுள்ளாதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்
Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget