விஜய்க்கு எதிராக தீர்ப்பு!உயர்நீதிமன்றம் செய்தது நியாயமா?உச்சநீதிமன்றம் கேள்வி | Supreme Court On TVK
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தவெகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று விசாரனைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசு தரப்புக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரனமாக தவெக கரூர் மாவட்ட பொறுப்பாளர், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நீக்கியதாக ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் விசாரனையை சிபிசிஜைடிக்கு மாற்றக்கோரி தவெக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இரு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் விசாரனைக்கு உட்பட்ட நிலையில், சென்னையில் இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி செந்தில் குமார் தனிநபராக இந்த வழக்கில் கருத்து தெரிவித்து தீர்ப்பு வெளியிட்டுவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடமான கரூர் மதுரை நீதிமன்ற எல்லைக்குள் வருகையில் சென்னையில் எப்படி அவர்களை ஆலோசிக்காமல் தீர்ப்பு வழங்கலாம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் தவெக தரப்பில் நீதிம்ன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இட்ம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்கான வழிமுறைகளை வகுக்க சொல்லை சென்னை நீதிமன்றத்திடம் கோரினால், அவர்கள் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவ இடத்தில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் விபத்துக்கான காரனம் என கூறினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சாட்சியங்களை நேரில் விசாரிக்க கோரினர். அதனை கேட்ட நீதிபதி, ஏன் சாட்சியங்கள் சென்னையில் ஆஜராகவில்லை என வினவினார்.
இதனையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், விஜய் தரப்பில் இதுவரை தார்மீக ரீதியில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. தலைவர் போல் அவர் செயல்படாமல் அங்கிருந்து ஓடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு பதில் வாதாடிய தவெக வழக்கறிஞர், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அங்கிருந்து சென்றார். அவர் வந்தால் கூட்டம் கூடும் எனக்கூறி காவல்துறை தான் அவரை அங்கிருந்து அழைத்து சென்றது என கூறினர். மேலும் இரவோடு இரவாக அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது ஏன்? சம்பவம் நடப்பதற்கு முன்பே திமுகவினர் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என கணித்தது எப்படி? என பல கேள்விகளை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவசர கால அடிப்படையில் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படலாம் என தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விரிவான பிரமாணப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.





















