Subramanian Swamy | லீக்கான ராகுல் ரகசியம்! சு.சுவாமி தந்த ஷாக்! என்ன செய்வார் மோடி?
ராகுல்காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, சோனியா காந்தி பிரதமர் மோடியை மிரட்டுகிறாரா என்றும் கேட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய குடியிரிமை சட்டத்தின்படி, இந்திய குடியுரிமை வைத்திருக்கும் நபர் வேறொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்க முடியாது. ஒரே நேரத்தில் 2 நாட்டின் குடியிரிமை வைத்திருந்தால் இந்திய குடியுரிமை நீக்கப்படும். அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி 2015ம் ஆண்டு முதல் விமர்சித்து வருகிறார். ஆனால் பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் எதுவும் செய்யாமல் அமைதி காப்பதன் பின்னணி என்ன என்று கேள்வி கேட்டு வருகிறார்.
இந்தநிலையில் ராகுல்காந்தியின் குடியுரிமை விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ள சுப்ரமணியன் சுவாமி, குடியுரிமை தொடர்பாக விளக்கம் கேட்டு 2019ல் உள்துறை அமைச்சகம் ராகுல்காந்திக்கு எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கை மாற்றிவிட்டு அமித்ஷாவை மோடி உள்துறை அமைச்சராக மாற்றியதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல்காந்தி 2003ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று, லண்டனில் ஒரு கம்பெனியை ஆரம்பித்ததாகவும், அதன் வரவு செலவு கணக்குகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, ராகுல்காந்தி அதில் தன்னை பிரிட்டிஷ் என்றே சொல்லியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இதன் உண்மைத்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமரை விமர்சித்துள்ள அவர், ‘மோடியும் அமித்ஷாவும் ராகுல்காந்தியை பாதுகாப்பது ஏன்? மோடி தொடர்ந்து ராகுலை காப்பாற்ற நினைத்தால் நான் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக வழக்கு போடுவேன். நடவடிக்கை எடுக்க கூடாது என சோனியா காந்தி மோடியை மிரட்டுகிறாரா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
2019லும் லண்டன் கம்பெனி விவகாரத்தை வைத்து டெல்லியை சேர்ந்த 2 பேர் மனு கொடுத்த போதும், இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஏதாவது ஒரு நிறுவனம் ராகுலை பிரிட்டிஷ் என்று குறிப்பிட்டால், அவர் பிரிட்டிஷ் குடிமகன் தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.