Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு என பணிகளை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தும் வகையில் செயல்பட வேண்டிய எதிர்கட்சியான அதிமுகவில் உட்கட்சி மோதலால் நிர்வாகிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட போட்டியால் தனித்தனி அணியாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஒரு பக்கம் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த செங்கோட்டையன் கடந்த வாரம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் நடிகர் விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைய இருப்பதாகவும், அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே செங்கோட்டையன் தவெகவில் இணைவது தொடர்பான தகவல் மேலும் உறுதியானது.




















