Sellur Raju | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மழைநீரை உடனடியாக அகற்ற் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ அதை நைட்டுக்குள்ள க்ளியர் பண்ணிடுவோம் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தது தற்போது கவனம் பெற்று வருகிறது.
மதுரை மாநகரில் நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான ஆலங்குளம், செல்லூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாய்களில் நரம்பியது இதனால் நேற்றிரவு முதல் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.
இந்த நிலையில் மழை பாதிப்புகளை செல்லூரில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே பகுதியில் ஆய்வில் ஈடுப்பட்டார். அப்போது அமைச்சரை சந்தித்த செல்லூர் ராஜூ மக்களின் குறைகள், அதிக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்தும் அமைச்சரிடம் தெரிவித்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைக்கேட்ட அமைச்சர் மூர்த்தி அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ, நைட்டுக்குள்ள க்ளியர் பண்ணிடுவோம் என உறுதி கொடுத்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கோரிக்கையை அமைச்சர் மூர்த்தி உடனடியாக ஏற்று செய்யப்படும் என கூறிய இந்த நிகழ்வு தற்போது கவனம் பெற்று வருகிறது.