Seeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்பு
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மரியாதை செலுத்தப்போன நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குருபூஜை இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முத்துராமலிங்க தேவரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்க்ளும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மரியாதை செலுத்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார், அப்போது சில நாட்களுக்கு முக்குலத்தோர் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் முக்குலத்தோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பசும்பொன்னுக்கு சீமான் வரக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மரியாதை செலுத்த சீமான் சென்ற போது அங்கிருந்தவர்கள் சீமானை நோக்கி சீமான் ஒழிக, சீமான் திரும்பிப்போ என ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர், பின்னர் காவல்துறையினர் தலையீட்டு முழக்கம் எழுப்பியவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதன் பின்னர் சீமான் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மரியாதை செலுத்தப்போன நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.