Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 22-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
Chennai Power Cut(22-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 22-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர்
- ராமாபுரம்
- வரதராஜபுரம்
- டீச்சர்ஸ் காலனி
- புழல்
- எம்டிஎச் சாலை
- சிவானந்தா நகர்
- அன்னை சத்யா நகர்
- எம்கேபி நகர்
- காமராஜபுரம்
- வானகரம் சாலை
- விஜிஎன் சாந்தி நகர்
- திருவேங்கட நகர்
- சோழபுரம்
- அம்பத்தூர் ஓடி
- வெங்கடாபுரம்
- கிருஷ்ணாபுரம்
- பருத்திப்பாக்கம்
மாதவரம்
- வடபெரும்பாக்கம் வி.எஸ். மணி நகர்
- கே.வி.டி. கார்டன்
- செக்ரிடேரியட் காலனி
- மாசிலாமணி நகர்
- டைடல் நகர்
- லாரி பார்க்கிங் யார்டு
- ஆண்டாள் நகர்
- அப்துல் கலாம் நகர்
- கிருஷ்ணா நகர்
- இந்தியா கேட் ரோடு
- கோத்தாரி சாலை
- திருப்பதி தேவஸ்தான நகர்
- யூசப் காலனி
- கண்ணா நகர்
- சாமுவேல் நகர் விரிவாக்கம்
- சரஸ்வதி நகர்
- கந்தசாமி நகர்
- சின்ன தோப்பு
- ரங்கா கார்டன்
- அன்பு வளர்மதி நகர்
- டி.ஜி. சாமி நகர்
- சுமங்கலி நகர்
- விநாயகபுரம்
குன்றத்தூர்
- மாதா மருத்துவமனை
- குயவர் தெரு
- தண்டலம்
- அலெக்ஸ் நகர்
- பாரதி நகர்
- சந்திரசேகரபுரம்
- முதலியார் தெரு
- எவரெஸ்ட் கார்டன்
- சதானந்தபுரம்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















