Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்
கடந்த சில தேர்தலில் உங்கள் கணிப்பு தவறாகியுள்ளதே, இந்த முறை நீங்கள் எவ்வளவு நம்பிக்கையாக உள்ளீர்கள் என்ற கேள்வி பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் வைக்கப்பட, அதற்கு ஆத்திரத்துடன் கோவம் பொங்க அவர் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..
இந்நிலையில் என்னுடைய கணிப்பான் அரண்டு போய் உள்ளவர்கள் தண்ணியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு ஜூன் நான்காம் தேதி வரை காத்திருங்கள் என்று பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தி வயர் செய்து நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில், நெறியாளர் கரண் தப்பார் - பிரசாந்த் கிஷோரிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்..
அதில் வட இந்தியாவில் பாஜக வெற்றி பெற்ற எண்ணிக்கைகள் குறைந்தாலும் தென்னிந்தியாவில் பாஜக பெரும் வெற்றிகள் மூலம் அது சரி கட்டப்படும் என்று பிரசாந்த் கிஷோர் பேசிக் கொண்டிருக்கையில், இடைமறித்த நெறியாளர் கரண் தப்பார் "எந்த அளவு இதை உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேள்வியை முன் வைக்கிறார்"
அதற்கு பதிலளிக்கும் பிரசாந்த் கிஷோர், எப்போதும் போல் தான் உறுதியாகவே சொல்கிறேன் என்று பதில் கூற.. மீண்டும் இடை மறிக்கும் கரண் தப்பார்.. நான் இப்படி கேட்பதற்கு காரணங்கள் இருக்கிறது.. கடந்த சில தேர்தல்களில் உங்களின் கணிப்பு தவறாகியுள்ளது. மே 2022ல் காங்கிரஸ் கட்சி ஹிமாச்சலில் தோல்வியடையும் என்ற கணித்தீர்கள் ஆனால் அவர்கள் வென்றார்கள்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆவேசமான பிரசாந்த் கிஷோர்..
என்னது நான் சொன்னேனா? வீடியோ ஆதாரம் இருக்கிறதா? என்னிடம் வீடியோவை காமியுங்கள், அப்படி நான் சொல்லியிருந்தால் அரசியலை விட்டு போய் விடுகிறேன். அப்படி இல்லை என்றால் நீங்கள் பப்ளிக்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதன்பிறகு நெறியாளர் ஒரு பக்கம்.. பிரசாந்த் கிஷோர் இன்னொரு பக்கம் மாறி மாறி தங்களுடைய வாதங்களை முன்வைக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால் தன்னுடைய கேள்வியை நிறுத்தாத நெறியாளர் கரண் தப்பார் "மே 2022 ஹிமாச்சலில் காங்கிரஸ் தோற்கும் என்று சொன்னீர்கள், செப்டம்பர் 2023ல் தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சி வெற்றி பெறும் என்று சொன்னீர்கள்" என்று குறிப்பிட்டார்
ஆனால் பிரசாந்த் கிஷோர் இறுதிவரை தான் தவறாக கணித்ததை ஒப்புக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இந்த பேட்டியை வெளியிட்டுள்ள தீ வயர் செய்தி நிறுவனம், பிரசாந்த் கிஷோர் போட்ட ட்வீட்டுகள், மற்றும் செய்தித்தாள்களுக்கு அவர் அளித்த பேட்டி ஆகியவற்றை இணைத்து ஆதாரங்களுடன் அந்த நேர்காணலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோர் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்து விட்டதாக கருத்துக்களை சொல்லி பலர் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர், இதனால் ட்விட்டர் முழுவதும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் தான் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், தண்ணீர் அருந்துவது உடலுக்கு மூளைக்கும் நல்லது. என்னுடைய கணிப்பால் அரண்டு போய் உள்ளவர்கள் அனைவரும் ஜூன் நான்காம் தேதி கையில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். என்று பதிவிட்டுள்ளார் அவர் 2021 மே மாதம் மற்றும் மேற்குவங்கம் நினைவிருக்கிறதா என்றும் பதிவிட்டு தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.