Odisha VK Pandian : திருடன் என்ற மோடி.. திருப்பி அடித்த பாண்டியன்.. அதிரும் ஒடிசா!
BJD தலைவர் VK பாண்டியன் ஜெகநாதர் கோவிலின் கஜானா சாவிகள் குறித்த மோடியின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை ஊடகங்களையே சந்தித்திடாத பல அமுக்கிய தலைவர்களும் கூட, தற்போது சிறப்பு பேட்டிகளை அளித்து தங்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.
பூரி ஜெகந்நாதர் கோயிலின் கஜானா சாவிகள் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், "எங்கள் சொந்த வீட்டின் சாவி கிடைக்காத போது, ஜெகநாதரிடம் பிரார்த்தனை செய்து, சாவியைக் கண்டுபிடிக்க அவரது ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். ஆனால், ரத்ன பண்டரின் (கோயில் கஜானா) சாவி ஆறு ஆண்டுகளாக காணாமல் போய்விட்டது.
ரத்னா பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றிய விசாரணைக் குழு அறிக்கையின் முடிவுகளை பற்றி ஒடிசா மக்கள் அனைவரும் அறிய விரும்புகின்றனர். ஆனால், பிஜு ஜனதா தளம் அதை அடக்கியுள்ளது. பிஜு ஜனதா தளத்தின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்திற்கு அனுப்பியது யார்?" என்றார். இப்படி மோடி பேசியது தொடர்பாக வி.கே. பாண்டியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வி.கே பாண்டியன் “ஜகந்நாதர் கோயிலின் சாவிகள் எங்கே போனது என்பதை பிரதமர் கண்டுபிடிக்க வேண்டும், அவருக்கு இவ்வளவு அறிவு இருந்தால், ஒருவேளை, மரியாதைக்குரிய பிரதமரிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், அவருக்குக் கீழே பல அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் மோடியிடம் சொல்வார்கள். அவருக்கு ஓரளவு அறிவு இருக்கும் அறிவை வைத்து , ஒடிசா மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர் அரசியல் அறிக்கையை வெளியிடுகிறார். எனவே நாங்கள் அதை அப்படியே எடுத்துக்கொள்வோம். பிரதமர் மோடி நாட்டின் பணவீக்கம், இளைஞர்களின் வேலைவய்ப்பு நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசாமல் கோயிலை வைத்து வெறும் அரசியல் பேச்சு மட்டும் தான் பேசுகிறார். அவருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது போல என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் வி.கே.பாண்டியனை விமர்சித்ததன் மூலம் தமிழர்களை திருடர்கள் என்பதா என பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.