மேலும் அறிய

Independence Day 2021 : 75வது சுதந்திர தினம் - 59 அடி வைர விழா நினைவுத்தூணை திறந்து வைத்த ஸ்டாலின்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கொடியேற்றிய பிறகு சுதந்திர தினவிழா உரையாற்றிய முதல்வர் பிறகு சுதந்திர தின விருதுகளை வழங்கினார்.

அதன் பிறகு சுதந்திர தின வைரவிழாவை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலத்தில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூணை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். சுமார் 59 அடி உயரம் கொண்ட இந்தத் தூணில் உச்சியில் நான்கு சிங்கங்கள் மற்றும் அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தைக் கொண்டு ரூ.195 கோடியில் மிக விரைவாகப் பத்தே நாட்களில் இந்த தூண் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும், எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போற்றும் வகையில் நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் தூணை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொடியேற்றி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டையில் இந்திய நாட்டின் இந்தக் கொடியை ஏற்ற ரத்தம் சிந்திய வீரர்களை வணங்குகிறேன். விண்ணூற்ற கொடியினை ஏற்றும் வாய்ப்பு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். கோட்டைக்கொத்தளத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சுதந்திர நாளில் யார் முதலமைச்சர் யாரோ அவர்தான் கொடியேற்ற வேண்டும் என்கிற வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்றுத்தந்த மாபெரும் சுதந்திர சிந்தனையாளர். ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா. நீதிக்கட்சியின் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். மகாத்மா காந்தி கதர் ஆடை உடுத்தத்தொடங்கிய நூற்றாண்டு. வ.உ.சிக்கு 150வது பிறந்தநாளும் இந்த ஆண்டுதான். மகாகவி பாரதி மறைவின் நூறாண்டு. எத்தனையோ வரலாற்று நிகழ்வின் 100 ஆண்டு இந்த 2021. திமுக அரசின் 6வது முறை ஆட்சி. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித்தேவர்,வேலுநாச்சி, தீரன் சின்னமலை,மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை, தந்தைப்பெரியார், திருவி.க., சிங்காரவேலர், திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், ஜீவா, கேப்டன் லட்சுமி, மா.போ.சி,, கே.பி.சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்தியாகிகளின் ரத்தம் கொண்டு கட்டப்பட்டது இந்திய சுதந்திரத்தூண். நான் சொன்னவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். அவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை ரூ.17000 லிருந்து ரூ.18000ஆக உயர்த்தப்படும் குடும்ப ஓய்வுதியத்தொகை ரூ,8500லிருந்து ரூ.9000 ஆக உயர்த்தப்படும். சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என நிதி திரட்டிக் கொடுத்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் கண்டனத் தீர்மானம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன்னுக்கு கோட்டை, ராஜாஜி நினைவாலையம், வள்ளியம்மை நினைவு இல்லம், வ.உ.சி செக்கு நினைவுச்சின்னமானது, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூன் என நாட்டுக்காக உழைத்தவர்களைப் போற்றுகிறோம். வ.உ.சி பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாட்டம். அரசியல் விடுதலை மட்டும் போதாது பொருளாதார விடுதலையும் வேண்டும் என வ.உ.சி. விரும்பினார்.

எல்லாருக்கும் எல்லாம் என உறுதி கொண்டது அரசு. கொரோனா மருத்துவ, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களில் கொண்டு நிறுட்த்ஹிவிட்டது கொரோனா. மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அரசின் 101வது நாள். வெள்ளை அறிக்கை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம், இதில் கொரோனாவை மேலாண்மை செய்து காப்பாற்ற வேண்டியதிலும் வெற்றி கண்டிருக்கிறது. 14வது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆவின் விலை குறைப்பு. மகளிர் இலவசப் பேருந்துப் பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், தகைசால் தமிழர் விருது தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 3கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கிண்டி கிங் வளகாத்தில் அமைய உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகம் அறிவியல் பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒருசேர வளரவேண்டும். அரசு, தனிமனித பொருளாதாரம் தன்னிறைவு மிக்கதாக வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக மாற வேண்டும். இதைத்தான் நம் தியாகிகள் விரும்பினார்கள் அதற்குதான் போராடினார்கள். அத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ எனப் பேசினார்.

அரசியல் வீடியோக்கள்

Thirumavalavan :
Thirumavalavan : "விஜய் வந்தா நான் வரல” திருமா Condition.. ஆதவ் Shocked.. பின்னணியில் ஸ்டாலினா?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget