Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?
அமெரிக்காவில் மர்ம நபர்கள் 2 இந்து கோயில்களை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. GO Back Hindus என்ற சர்ச்சைக்குரிய வாசகங்களை அங்கு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவில் நியூயார்க்கின் ராபின்வில்லி நகரில் அமைந்துள்ளது. இந்த கோவில் உலகின் 2-வது மிகப்பெரிய கோவிலாகும். இந்த கோவிலில் நியூயார்க் நகரை சேர்ந்த இந்து மக்கள் வழிப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த கோவிலுக்குள் புகுந்த மரம்நபர்கள் கோயிலை சேதப்படுத்தியும் கோயிலுக்கு வெளியே உள்ள சாலைகளில் இந்து வெறுப்பு வாசகங்களை எழுதியும் வைத்திருந்தனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலான ஸ்ரீ சுவாமி நாரயண சுவாமி கோவிலில் Go back hindus என்ற வாசகத்தை எழுதி வைத்து சென்றது பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த sacramento county-ன் அமெரிக்க பிரதிநித ஏமி பெரா Sacramento County இல் மதவெறிக்கும் வெறுப்புக்கும் என்றுமே இடமில்லை. இங்கு நடந்த மதவெறுப்பு செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக இந்து ஃபவுண்டேசன் அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலில் நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்த பிரார்த்தனையில் ஈடுப்பட்டும் சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வை விதைப்பவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 10 நாட்களுக்குள் இரண்டு கோவில்களில் மத வெறுப்பு மற்றும் கோவிலை சேதப்படுத்திய சம்பவம் அமெரிக்கவில் உள்ள இந்து மதத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.