Eps in Trouble | இடி மேல் இடி..பாவம் எடப்பாடி..!இப்போ என்ன செய்வார்?
ஒரே நேரத்தில் ஒரு மனுஷனுக்கு இவ்ளோ பிரச்சனையா என்று புலம்பும் அளவிற்கு அடுத்தடுத்து வந்த செய்திகளால் துவண்டு போயிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி..
அதில் உண்மையிலேயே அதிமுக தன்னுடைய வாக்கு வங்கியை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டது, அப்படி இருந்து தேர்தலில் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட இவை அதிகம். கடந்த 2021 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக 43.72 சதவீதம் வாக்குகளை பெற்றுருந்தது. அப்படி பார்க்கையில் அதிமுக தற்போது தேர்தலை புறக்கணித்துள்ளது, அப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருக்க தானே வேண்டும். ஆனால் அது அதிகமாகியுள்ளது. அப்படி என்றால் அதிமுக ஆதரவாளர்கள், அதிமுக போட்டியிடாததை கண்டு கொள்ளாமல், கூட்டம் கூட்டமாக வந்து வேறு கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
அடுத்ததாக இன்னொரு பக்கம் அதிமுகவின் செங்கோட்டையன், கேபி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உள்பட அதிமுகவின் எட்டு முக்கிய அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு நேரடியாகவே வந்து ஓபிஎஸ் டிடிவி சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும், தெரிந்திருப்பதால் அதிமுக பலவீனமாக இருக்கிறது என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்..
மற்றொரு பக்கம் நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் சிபிசிஐடி இறுக்கிக் கொண்டே வரும் நிலையில், முன் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டால், அது அதிமுகவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும். இப்போதுதான் அடுத்தடுத்த சம்பவங்களால் திமுக சிக்கல்களில் சிக்கி உள்ளது, அதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர அரசியல் செய்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டால், மீண்டும் அதிமுக சைலன்ட் மோடுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இன்னொரு விஷயம் நீண்ட நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமியை நிறுத்தி வருகிறது, அதுதான் அண்மையில் கொங்கில் கிடைத்த மக்களவை தேர்தல் முடிவுகள். பத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளை கையில் வைத்திருக்கும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு சென்று விட்டது. சில காலமாகவே கொங்கின் பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சர், எடப்பாடி என் ரைட் ஹேண்ட் என்று சொல்லலாம், அவர் பாஜகவுடன் மறைமுக தொடர்பில் இருப்பதாக எடப்பாடி காதுகளுக்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாத எடப்பாடிக்கு, அண்ணாமலைக்கு இரண்டாவது இடம், அதிமுகவுக்கு மூன்றாவது இடம் என்ற இந்த ரிசல்ட் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஒரே நேரத்தில் பல்வேறு அதிர்ச்சிகரமான செய்திகள் தொடர்ந்து காதுகளுக்கு வருவதால், கலக்கத்தில் உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.