Elections 2024 : ராகுலை சந்திக்க படையெடுக்கும் IAS அதிகாரிகள்..மாறும் காட்சிகள்!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்திருப்பதாக வெளியாகும் தகவல்.. காட்சிகள் மாற தொடங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்று, ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இதழ் முக்கியமான விஷயம் என்னவென்றால், முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு எப்போதுமே தேர்தலுக்கு முன்பே, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்ற விவரங்கள் கிடைத்துவிடும். பல நேரங்களில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது என்றால், பொறுப்பேற்க போகும் தலைவரை சந்தித்து பொக்கே கொடுப்பது அதிகாரிகளின் வழக்கம்.. ஆனால் பெரும்பாலும் இந்த சடங்குகள் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் அன்று தான் நடக்கும்.
இந்நிலையில் தான் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே ராகுல் காந்தியை டெல்லியில் முக்கிய அதிகாரிகள் சந்தித்து இருப்பதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஜூன் ஒன்றாம் தேதி I.N.D.I.A கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மக்களவைத் தேர்தலில் முடிவுகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் பயணிக்கும் சூழலில், ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கியுள்ளது அரசியல் களத்தில் காட்சிகள் மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.
நிலையில் தான் ஆட்சி மாறப்போகிறது, அதன் காரணமாகவே காட்சிகள் மாறி வருகின்றன, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல்கள் கிடைத்துவிட்டது, அதன் காரணமாகவே ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் காலரை கெத்தாக தூக்கி விட தொடங்கியுள்ளனர்.