DMK vs Congress : திமுக-காங்கிரஸ் புகைச்சல்? END CARD போட்ட ராகுல்
திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் நிலவு வருகிறது என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு நிகழ்வுகளும் நடந்துவந்தன.. ஆனால் ஒரே ஒரு மெசேஜ் போட்டு அனைத்து பேச்சுகளுக்கும் எண்டு கார்டு போட்டுள்ளார் ராகுல் காந்தி..
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி எதிர்க்கட்சிகள் அனைத்தும் நகரத் தொடங்கிவிட்டன, நிலையில் நடிகர் விஜய்யின் தேர்தல் அரசியல் களம் இறங்கி உள்ளதால், தற்போது கூட்டணி கணக்குகள் எப்படி அமையப் போகின்றன என்ற பல்ஸ் எகுரா தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 2019 தேர்தல் முதல் தன்னுடைய கூட்டணியை இணக்கமாக வைத்துக் கொண்டுள்ளது திமுக. அதன் காரணமாகவே மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வருகிறது திமுக கூட்டணி.
ஆனால் சமீப காலமாக கூட்டணி கட்சிகள் திமுகவை, பலமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பழனியில் நடந்த முருகன் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் எதிர்த்துள்ளனர்..
இதன் தொடக்க புள்ளி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கொடுத்த தேநீர் விருந்தை கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக அதில் கலந்துகொண்டு ஆளுநருடன் நெருக்கம் காட்டியது.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட்ட விழாவில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்கை அழைத்து விழாவை நடத்தியது திமுக. அப்போது ராகுல் காந்தி ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் டைரக்டாக இறங்கி அடிக்க தொடங்கினார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். சென்னை மேயர் பிரியாவுக்கு கடிதம் எழுதியவர் கூவம் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டார்.
இதையெல்லாம் வைத்து சலசலப்புகள் எழுந்த நிலையில், காங்கிரசுக்கு அதிமுகவும் கூட்டணி அழைப்பு கொடுத்து வந்தது. இன்னொரு பக்கம் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக அல்லது த.வெ.க பக்கம் சாய்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில்தான் இது அனைத்திற்கும் இரண்டு காடு போடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் ஓட்டம் வீடியோவை போட்டதற்கு, சகோதரரே நாம் எப்போது சென்னையில் ஒன்றாக சைக்கிள் ஓட்ட போகிறோம் என்று கேட்டு பதிவிட்டார் ராகுல் காந்தி?
அதற்கு அன்பு சகோதரரே நீங்கள் எப்போது ப்ரீயாக இருக்கிறீர்களோ அப்போது சென்னையில் வாங்க சுற்றலாம், நான் தரவேண்டிய ஸ்வீட் பாக்ஸ் பாக்கியுள்ளது. சைக்கிளிங் முடித்துவிட்டு என் வீட்டு தென்னிந்தியாவை சுவையான மதிய உணவை இனிப்புடன் சுவைப்போம் இன்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டணியில் விரிசல் இதுல அனைத்து விதமான பேச்சுகளுக்கும் இதன் மூலம் ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளனர் ராகுல் காந்தியும் ஸ்டாலின்.