Delhi Election Exit Poll | அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் AAP, காங்கிரஸ் ! வெளியான EXIT POLL | BJP
டெல்லி சட்டப்பேரவை தேர்தல், இன்று நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன். யாருக்கு எவ்வளவு தொகுதி கிடைக்க வாய்ப்பு என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பாஜக டெல்லியில் 27 ஆண்டுகள் கழித்து அரியணை ஏற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று நிலையில் , இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதி நிறைவடைந்தது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி 57.70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கையானது வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை, தற்போது வெளியிட்டுள்ளன.
பாஜக கூட்டணிக்கு 35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கூட்டணிக்கு 32 முதல் 37 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. இதன் மூலம், பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
என்.டி.டி.வி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக 51-60 ஆம் ஆத்மி 10-19 காங்கிரஸ் 0. சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக 40 ஆம் ஆத்மி 30 காங்கிரஸ் 0 டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக 37 - 43 ஆம் ஆத்மி 32-37 காங்கிரஸ் 0 -2 இடங்கள் ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக 35-40 ஆம் ஆத்மி 32-37 காங்கிரஸ் 0-1 இடங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக -51 -60 ஆம் ஆத்மி 10-19 சாணக்யா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக 39-44 ஆம் ஆத்மி 25-28 காங்கிரஸ் 2-3
நிலையில் பாஜக டெல்லியில் 27 ஆண்டுகள் கழித்து அரியணை ஏற இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தகவல் வெளியான நிலையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















