Congress vs dmk: வார்த்தையை விட்ட காங்கிரஸ்! ஸ்டாலின் செய்த சம்பவம்! சீனுக்கு வந்த ராகுல்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுக-விற்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் பேசியதாகவும், இந்த விவகாரத்தை திமுக டெல்லிக்கு எடுத்துச் சென்றதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மேலிடம் டோஸ் விட்டதாகவும் சொல்கின்றனர்.
தமிழக அரசியலில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற்றதில்லை. ஆனால் சமீப காலமாக ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்பது தொடர்பன பேச்சுகள் எழுந்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு தவெக என்ற கட்சியை உருவாக்கிய விஜய் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கொழுத்திப்போட்டார். இதனால் தமிழக அரசியலில் 2026-ல் கூட்டணி ஆட்சி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு கடும் தலைவலியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் தான் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழுவில் கூட்டணி ஆட்சி தொடர்பான கொளுத்திப்போட்டிருக்கிறார் திருநாவுக்கரசு. அதாவது, “திமுக கூட்டணியில் நாம் இருக்கிறோம். ஆனால், அடிமை கிடையாது. காங்கிரசின் வளர்ச்சிக்காக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது நமது உரிமை. கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவதும் ஆட்சியில் பங்கு கேட்பதும் எப்படி தவறாகும்? எதற்காக இதைப் பற்றிப்பேசவே பயப்படுகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி கோழையா? பேசவே பயப்பட்டால் மக்களை சந்தித்து எப்படி கட்சியை நாம் வளர்க்கமுடியும்? திமுகவில் கூட்டணி ஆட்சியை கேட்கக் கூட பயந்தால் எப்படி? துணிச்சலாக கேட்கவேண்டும். இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை எடுங்கள்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
இதையே காங்கிரஸ் கட்சியின் கொறடா கே.ஆர். ராமிசாமியும் பேச திமுக கூட்டணிக்கு ஆதரவாக கே.வி.தங்கபாலு, கே.எஸ். அழகிரி ஆகியோர் பேச காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அனல் பறந்ததாக சொல்கின்றனர். இதனிடையே இந்த விவகாரங்கள் எல்லாம் திமுக கூட்டணிக்கட்சி தலைவர் ஸ்டாலின் காதுகளுக்குச் செல்ல கங்கிராஸ் நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டாராம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலைமைக்கு இவர்களுக்கு நமது கூட்டணியில் அதிகமான இடங்களை கடந்த முறை கொடுத்ததே பெரிய விசயம். இதில் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டுமா என்று கோபப்பட்டதாகவும் இந்த விவகாரத்தை டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எடுத்துச் சென்றதாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட மல்லிகார்ஜூன கார்கே, கூட்டணி ஆட்சி குறித்தோ, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிற வகையிலோ காங்கிரஸ் நிர்வாகிகள் பேசக்கூடாது என்று டோஸ் விட்டதாக சொல்கின்றனர்.





















