Coimbatore Mayor : கதறி அழுத பெண் கவுன்சிலர்! வாசலில் முன்னாள் மேயர்! கதறும் ஆதரவாளர்கள்
கோவை மற்றும் நெல்லையில் திமுகவில் ஏற்ப்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக இரண்டு மாநகராட்சி மேயர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். புதிய மேயர் தேர்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது. இந்த நிலையில் மறைமுக தேர்தலுக்கு தாமதமாக வந்த நெல்லை முன்னாள் மேயர் சரவணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், இதே போல கோவை மேயராக திமுக முன்மொழியும் என்று எதிர்ப்பார்த்த கவுன்சிலர் மீனா லோகு ஏமாற்றமடைந்து கண்ணீருடன் வெளியேறியதும் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராக உள்ள மீனா லோகு கண்ணீர் மல்க கூட்டத்திலிருந்து வெளியேறினார். மேயர் வாய்ப்பு கிடைக்கும் என மீனாலோகு எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தார். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். நெல்லை திமுகவில் ஏற்ப்பட்ட உள்கட்சி பூசல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மறைமுக தேர்தலுக்கு தாமதமாக வாக்களிக்க வந்த முன்னாள் மேயர் சரவனணுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் வாசலில் காக்க வைக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இப்படி நெல்லை முன்னாள் மேயர் சரவனணுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதும் , கோவை திமுக கவுசிலர் மீனலோகு கண்ணீருடன் வெளியே சென்ற சம்பவமும் திமுகவினர் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.





















