Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!
சென்னையில் மிரட்டி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அருண்குமார் பதவியேற்ற 2 மாதங்களில் நடக்கும் 2வது என்கவுண்டர் இது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என 50க்கும் அதிகமாக வழக்குகள் உள்ளன. சிறைக்கே சென்றாலும் உள்ளே இருந்தே குற்ற சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது என போலீசாருக்கு குடைச்சல் கொடுத்து வந்துள்ளார் ரவுடி பாலாஜி. வடசென்னையில் முக்கிய ரவுடியாக வலம்வந்த நாகேந்திரனுக்காக பல முக்கிய அசைன்மெண்ட்டுகளை காக்கா தோப்பு பாலாஜி முடித்து கொடுத்துள்ளார். இந்த நாகேந்திரன் தான் தற்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ளார். அதனால் இவருக்கும் அந்த கொலையில் சம்பந்தம் இருக்குமோ என்ற பேச்சும் அடிபட்டது.
காக்கா தோப்பு பாலாஜி செய்த கொலை சம்பவங்களில் முக்கியமானது பில்லா சுரேஷ் கொலை. வடசென்னையை சேர்ந்த பில்லா சுரேஷ் என்பவரை அவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி கொலை செய்தார்.
2021ல் ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பாலாஜி தலைமறைவாக இருந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ் என் எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க போலீசார் சென்றனர். ஆனால் அவர்களை பார்த்ததும் போலீசாரை பாலாஜி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற 2 மாதங்களில் நடக்கும் 2 வது என்கவுண்டர் இது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சொல்லி பொறுப்பேற்ற அருண் அதற்கான வேலைகளை பார்த்து வருகிறாரா என பேசப்பட்டு வருகிறது.