”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav
பெண்களுக்கு ரூ.30,000 வழங்கப்படும் தேஜஸ்வி யாதவ் அதிரடி அறிவிப்பு! கலக்கத்தில் நிதிஷ்குமார்!
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது மற்றும் நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்றுடன் இறுதிகட்ட பிரச்சாரம் முடிவடைகிறது.
நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர். இப்படி 3 அணிகள் களமிறங்குவதால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. இதல் முதன்மையாக பார்க்கப்படுவது பெண்கள் வாக்குகள்தான்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக “மந்திரி மஹிளா ரோஜ்கர் யோஜனா” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இதன் முன்னோட்டமாக 1 கோடி பெண்களுக்கு சுயதொழில் செய்ய ரூ .10000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் பெண்கள் வாக்குகள் நிதிஷ்குமாருக்கு போகும் என்று சொல்லப்பட்டது
இதனை முறியடிக்கும் விதமாக தேஜஸ்வி யாதவ் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். மகாகட்பந்தன் கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பொருளாதரத்தில் உயர்வதற்காக ரூ 30,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் 'மாய் பஹின் மான் யோஜனா' வாக்குறுதி பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது .இதன் மூலம் மாதம் ரூ. 2500 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.





















