Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?
விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு திமுக எம்பி ஆ ராசா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சமூக நீதி பற்றி பேசும் ஆ ராசா ஏன் சொந்த தொகுதியான பெரம்பலூரில் போட்டியிடாமல் நீலகிரியில் ஏன் போட்டியிடுகிறார் என ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்தது முதலையே கூட்டணிக்குள் புகைச்சல் என்ற செய்திகள் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. குறிப்பாக அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, திமுகவின் பலரை அதிர்ச்சியில் வாழ்த்தியது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய பின் நேரில் அவரை சென்று சந்தித்த திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு எடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவித்தார். இதனால் திமுக விசிக இடையேயான சலசலப்பு சற்று ஓய்ந்து இருந்தது, இந்நிலையில் தான் நான்காண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராக கூடாது என உதயநிதியை தாக்கிப்பேசினார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.உதயநிதியை தாக்கியது மட்டுமின்றி.. விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் போது அவர்களையே நம்பி இருக்கும் சமூகங்கள் முழுமையாக பயனடையும் அதனால் பேசிக்காவை அதிகாரத்தில் பங்கெடுக்க வைப்பது தான் எனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் நேரடியாக திமுகவை சாடினார் ஆதவ் அர்ச்சனா.
இதைத்தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து நேரடி எதிர்ப்பும் கிளம்பியது. செய்தியாளர்களை சந்தித்த ஆ ராசா..ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பாஜகவுக்கு துணை போகிறார் என கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இது திருமாவளவனின் கருத்தாக இருக்காது என்று மறுமொழி தெரிவித்தார்.
இந்நிலையில் ஆ ராசாவின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிகாரப்பரவலை நோக்கி செல்வது எப்படி பாஜகவுக்கு துணை போவதாக இருக்கும்..எங்களை விட கடுமையாக பாஜகவை எதிர்ப்பவர்கள் யாருமில்லை.
அதிகாரத்தை பற்றி கேட்டா ப்ரோ பிஜேபி ஆ..பாஜகவுக்கு எதிராக பேசுவோர் அனைவரும் ஆண்ட்டி இந்தியன் என்ற ஹச் ராஜாவின் கூற்றுக்கு இணையானது இது.
திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் செயல்திட்டம் கோருவதில் என்ன தவறு. எங்களால் விசிக கொடியை ஏற்ற முடியவில்லை. சமூகநீதி பேசும் ஆ ராசா அவர்கள் ஏன் சொந்த தொகுதியான பெரம்பலூரில் போட்டியிடாமல் நீலகிரிக்கு சென்றார்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு விசிக சார்பிலும் எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது வரை திருமாவளவன் இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது