மேலும் அறிய

Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைய உள்ளதாகவும் தனக்கு தவெக கட்சியில் துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று விஜயிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசிக துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனா, கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் அனைத்தும் விவாதப்பொருளாக மாறின. இருந்தும் விசிக தலைவர் திருமாவளவன் ஆதவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது விசிக மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற  ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும் விகடன் குழுமமும் நடத்திய அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அதே நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜயும் பங்கேற்றார். இருவரும் இணைந்து மாறி மாறி திமுக அரசை கடுமையாக விமர்சித்தது பேசுபொருளானது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கும் அழைப்பு விடுக்க, ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆதவ் பங்கேற்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அரசியல் கருத்துகள் எதுவும் தெர்விக்க வேண்டாம் எனவும் ஆதவிடம் தெரிவித்துள்ளார் திருமா. ஆனால் அரசியல் கருத்துகள் பேச வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்பியும் அதனை துளியும் கேட்காமல், விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுகவை சரமாரியாக தாக்கி ஆதவ் அர்ஜுனா பேசியது திருமாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தயாரான திருமா,  கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்தும் ஆதவ் ஓய்ந்த பாடில்லை ஆளும் கூட்டணியான திமுகவிற்கு எதிரான கருத்துகளை அள்ளி வீசிய வண்ணம் இருந்தார். திருமாவளவனும் ஆதவின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, ஆதவ் வேறு ஏதோ உள்நோக்க்த்துடன் செயல்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பிலேயே வெளிப்படையாக தெரிவித்தார். திருமாவின் வாக்கு அப்படியே பலித்தது போல, சில மணி நேரங்களிலேயே விசிக வில் இருந்து தான் முழுமையாக விலகிக்கொள்வதாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 


தனது கருத்துகள் அனைத்தும் விவாதப்பொருளாக மாறி இதனால் தனக்கும் தலைவர் திருமாவளவனுக்கும் இடையே விரிசல் ஏற்படுவதாகவும் இதன் காரணமாகவே தான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பக்கா ப்ளானுடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நெருப்பை கொளுத்திப்போட்டதில் இருந்தே திருமாவுடன் ஆதவுக்கு முரண் தொடங்கியது. சொல்ல சொல்ல கேட்காமல் திமுகவை விமர்சிப்பது, அடிமட்ட தொண்டர்களை தன்பக்கம் வைத்துக்கொண்டு உள்கட்சி பூசலில் ஈடுபடுவது என அவ்வப்போது சில பிரச்சனைகளை உருவாக்கி வந்தார். 

இதனிடையே பெரிய பூகம்பமாக புத்தக வெளியீட்டு விழாவில் விஜயை பங்கேற்க வைத்தது அங்கு வேங்கைவயல் சாதிக்கொடுமையை வெளிக்கொண்டுவந்தவர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்தியது என அனைத்திலும் ஆதவின் கைவண்ணம் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு மறைமுகமாக ஆதவ் பி ஆர் வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. 
 வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக  வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்தது.  அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வார இதழில் விஜய் கட்சி பற்றி பாசிட்வான ஒரு சர்வே வெளியானது. இதனையும் ஆதவ் அர்ஜூனாவே வர வைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு வழிவகுக்கவே அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மேடையை ஆதவ் பயன்படுத்திக்கொண்டதாகவும் அதன்மூலம் விசிக வில் இருந்து விலக அடித்தளம் போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது ப்ளான் பக்காவாக வெர்க் அவுட் ஆக தற்போது விசிகவில் இருந்து முழுமையாக விலகிவிட்டார். அனைத்து யூகங்களும் சரி என்றால் அடுத்ததாக ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது வெகு விரைவில் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அரசியல் வீடியோக்கள்

Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா
Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget