Aadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?
விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மார்ச் மாதம் முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் லாட்டரி தொழிலில் மார்ட்டின் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றும் லாட்டரி மார்டினுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் விசிக துணைப் பொதுச்செயலாளரும் லாட்டரி மார்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ரெய்டு நடந்த நிலையில், இன்று மீண்டும் ரெய்டு நடப்பதால் விசிக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் சோதனை நடந்த போது ஆதவ் அர்ஜூனா விளக்கம் கொடுத்திருந்தார். அதில், பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எனது தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்,