Encounter Velladurai Retired | காலையில் சஸ்பெண்ட்! மாலையில் மரியாதையுடன் ஓய்வு!இடையில் நடந்தது என்ன?
எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் வெள்ளத்துரை ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை உரிய மரியாதையுடன் வெள்ளதுரை ஓய்வு பெற்றார்.
காலையில் சஸ்பெண்ட் மாலை மரியாதையுடன் ஓய்வு அந்த் இடைப்பட்ட கேப்பில் நடந்தது என்ன என்பதை காணலாம்
காவல் துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டது காவல் துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு வழக்கில், தற்போது ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ADSP வெள்ளத்துரை நாளையுடன் ஓய்வு பெற தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன், 2 வழக்குகளில் மொத்தம் ரூ. 5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு உள்துறை அறிவித்துள்ளது. இத்தொகையானது, ஓய்வுக்கு பின்னர் அரசு வழங்கும் தொகைகளில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஒரு நாளைக்கு முன்னதாக நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளத்துரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார்.
உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்றார் . பின்னர் திருவண்ணாமலையில், மாவட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார்.
அவரது பணிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்து மாநில உள்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது ADSP வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை யடுத்து நேற்று மாலை ADSP வெள்ளதுரை மரியாதையுடன் ஓய்வு பெற்றார்.