”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
என் காதலை சேர்த்து வையுங்கள் என அதிமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர்களிடம் விநோத கோரிக்கை ஒன்றை வைத்தார். அதற்கு வைகைச்செல்வன் கொடுத்த பதில் கூட்டத்தில் சிரிப்பலையை உண்டாக்கியது. தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி அதிமுகவினர் சுவாரஸ்யமாக பேசிய விஷயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், அதிமுக சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடரப்பாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் செய்திருந்தார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செந்தில் ராஜன், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், முயற்சி,பயிற்சி மற்றும் தொடர்ச்சி இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் நான் காதலிக்கும் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என கேட்டதும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.
இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஒரே பெண்ணை பலரும் காதலிப்பது தான் பிரச்சனையாக இருக்கிறது.நானும் ஒரு காலத்தில் ஒரு பெண்ணை காதலித்து தான் வந்தேன். என் காதல் 2011 ஆம் ஆண்டு நிறைவேறியது என விளையாட்டாக பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.





















