மேலும் அறிய

மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !

திமுக மாமன்ற உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்து மக்கள் பணிகளுக்கு இடையூறு கொடுக்கிறார்கள் என மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை குற்றச்சாட்டு.

மதுரை வடக்கு தொகுதியில் லஞ்சம் இல்லா சேவை இயக்கம் என்ற பெயரில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க உதவி எண்களை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை அறிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை
 
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எந்த சேவைக்கும், எந்த காரணத்திற்கும் யாருக்கும் லஞ்சம் வழங்கத் தேவையில்லை என அறிவிப்பு பலகை வைத்து மேலும் ஒட்டு வில்லைகள் ஒட்டியும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். மேலும், மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 93630 80567 என்ற உதவி எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பெறப்படும் புகார்கள் ரகசியமாக பராமரிக்கப்பட்டு, நேரடியாக சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் நேர்மையான, வெளிப்படையான மக்கள் சேவை என்ற இலட்சியத்தை முன்னெடுத்து, மதுரை வடக்கு தொகுதியில் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க இம்முயற்சியை எடுத்துள்ளதாக எம்எல்ஏ கல்லாணை தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தவெக எம்எல்ஏ கல்லாணை பேசுகையில்..." வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கவுன்சிலர்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். தவெகாவினரை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். உள்ளாட்சி முடங்கி போய் உள்ளது. வார்டுகளில் பிரச்னை குறித்து கவுன்சிலர்களிடம் கூறினால் எங்களுக்கா வாக்களித்தீர்கள் தமிழக வெற்றிக்கழகத்தைச் சார்ந்தவர்களிடம் போய் கேளுங்கள் எனக் கூறி போராட்டத்தை தூண்டுகிறார்கள். மாநகராட்சியில் பல இடங்களில் கவுன்சிலர்கள் தவெக தொண்டர்களை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். கவுன்சிலர்களிடம் ஒன்றே ஒன்று கூறுகிறேன். மக்களுக்கு நீங்கள் நல்லது செய்யவில்லை. செய்ய வருபவர்களை தடுக்காதீர்கள். மக்கள் ஆதரவு கொடுத்ததால் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியுள்ளோம். எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்க வேண்டாம் எவ்வளவு நெருக்கடியை கொடுத்தாலும் நாங்கள் மக்கள் பணியை செய்வோம். 
 
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள வேண்டும்
 
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள் முதல்வர் விஜய் மற்றும் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை எனக் கூறுவதை புலம்பல் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் பேராதரவு பெற்றுள்ளோம். மக்களுக்கு நல்லது செய்வதை அவர்களால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு குற்றம் சொல்ல வேண்டும். குறைசொல்ல வேண்டும் என பேசுகிறார்கள். ஆட்சியில் இருந்தவர்கள் ஏற்கனவே செய்த தவறுகளை திருத்தவே பல வருடம் தேவைப்படுகிறது. வருங்கால அரசியல் இனி விஜய் மட்டுமே. தமிழக நிதிநிலை அறிக்கையில் மதுரைக்கு இடம்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் 400 கோடி ரூபாய் திட்டங்கள் தொடர்பாக அறிக்கை கொடுத்துள்ளோம். நம்பிக்கையோடு பட்ஜெட்டில் மதுரைக்கு திட்டங்கள் கொடுக்கப்படும் என்ற காத்திருக்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பம் நாங்கள் அழைப்பு விடுப்போம் என பேசினார்.
 
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget