(Source: ECI/ABP News/ABP Majha)
Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, எம்.எஸ்.பிரசாந்த் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உயிரிழந்தவர்கள் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம் என தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார். கள்ளச்சாராயம் அருந்தியதாக போலீசாரோ, மருத்துவர்களோ உறுதிப்படுத்தவில்லை என்றார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கண்ணுக்குட்டி என்ற சாராய வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை CBCID-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.