Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
தொழிலதிபரும் ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளருமான சந்தோஷ் ரெட்டி பெண் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி மீது பணமோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சந்தோஷ் ரெட்டியின் புகாரை தொடர்ந்து நசரத்பேட்டை காவல்துறையினர் பார்வதி மீது FIR பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில் இருந்தே ஈவிபி ஃபிலில் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் பல பிரபல படப்பிடிப்புகளுக்கு பெயர்போன ஈவிபி பிலிம் சிட்டியின் உரிமையாளர் தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டியின் மீது ஆடை வடிவமைப்பாளர் பார்வதி சமீபத்தில் அளித்த புகார் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. அதில் சந்தோஷ் ரெட்டி தன்னை அடித்து தாக்கியதாக அவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புகார்களின் பின்னணி என்ன? என்பதை விரிவாக காணலாம்..
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேந்தவர் பார்வதி வயது 43. இவரும் இவரது கணவர் பார்த்திபனும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் ஈவிபி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகமாகியுள்ளனர். அப்போது தன்னை இன்ஸ்டா பிரபலம் என அறிமுகப்படுத்திக்கொண்ட பார்வது, பிரபலங்களுக்கு தான் ஆடை வடிவமைப்பதாகவும், எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏ டூ இசட் ஈவண்ட்ஸ் எனும் திருமண ஏற்பாடு கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறி காண்டாக்டை வளர்த்துள்ளனர்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர்களை அணுகிய சந்தோஷிடம் நெருக்கம் காட்டி குடும்ப நண்பர்கள் போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் விலையுயர்ந்த கடிகாரம் பேக் போன்றவற்றை தரமாக தாங்கள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக வாங்கித்தருவதாக கூறி மோசடிக்கு அடிவாரம் போட்டுள்ளனர். அதற்காக 3 கோடி ரூபாயை தங்களது வங்கிக் கனக்கில் செலுத்த சொல்லியதன் பேரில் சந்தோஷ் ரெட்டியும் செலுத்தியுள்ளார். பின்னர் வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருந்தால் வரி பிரச்சனை வரும் எனக்கூறி பணத்தை திருப்பி அனுப்பியதோடு நேரடியாக பொருள் வாங்கும் கடையில் பணத்தை செலுத்த கூறியுள்ளனர். பொருளை ஆர்டர் கொடுத்து தான் வாங்க முடியும் அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். லூயி விட்டன் கடைக்கு சென்று பல லட்சம் மதிப்புள்ள பிராண்டட் பொருட்களையும், நகைக்கடையில் கோடி மதிப்பில் நகையும் வாங்கியுள்ளனர். சந்தோஷ் ரெட்டியும் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் கூறியதை எல்லாம் செய்துள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து சந்தோஷ் அவர்களை தொடர்புகொண்டு பொருட்களை கேட்டபோது அலட்சியமாக பதிலளித்துள்ளனர். பின்னர் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் கோபமான சந்தோஷ் அவர்களை மிரட்டியபோது, பார்வதி உங்கள் மீது பொய் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் பெங்களூர் காவல்நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது சந்தோஷ் ரெட்டி தன்பக்க நியாயங்களை விவரித்து வக்கீல் மூலம் விளக்கம் வெளியிட்டதோடு, பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எஃபைஆர் பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.





















