Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
ஆம்பூர் அருகே தனியார் உணவகத்தில் பணியாற்றும் வடமாநில இளைஞரின் பிறப்புறப்பை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்த !சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷெரிப் என்பவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று (14) அதிகாலை கழிவறை செல்வதற்காக வந்த போது, உணவகத்தில் மின்சார காரிற்கு சார்ஜ் போட வந்த நபரின் இரண்டு வளர்ப்பு நாய் ஷெரிப்பை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்துள்ளது.
பின்னர் ஒரு நாய் ஆக்ரோஷமாக ஓடிவந்து அங்கு ஓரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஷெரிப்பை பிறப்புறப்பில் கடித்துள்ளது.இதில் ஷெரிப்பின் பிறப்புறுப்பில் நாயின் பற்கள் இறங்கியதால், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு, அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது.
உடனடியாக அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
மேலும் நாயின் உரிமையாளர் மீது ஷெரிப் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஷெரிப்பை நாய் ஆக்ரோஷமாக கடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















