Husband torture wife : மார்பு.. அந்தரங்க பகுதி.. 16 இடங்களில் சூடு வைத்த சைக்கோ கணவன்..
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சீராக சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் பாண்டியன் சொன்ன ஒரு பெரிய பொய் புயலைக் கிளப்பியுள்ளது. தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து மனைவியை இறந்ததை வெளியே சொல்லாமல் கலைவாணியை திருமணம் செய்துள்ளார் பாண்டியன். இந்த விவரம் கலைவாணிக்கு தெரியவர இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு வருவதையே பாண்டியன் தவிர்த்துள்ளார். வீட்டுக்கே வராமல் என்ன செய்கிறார் என்று கண்காணித்ததில் பாண்டியன், மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.





















