Chennai women suicide : ஜோதி ஸ்ரீ பகீர் வாக்குமூலம்.. தொடரும் வரதட்சணை மரணம்..
சென்னை, கே.கே நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர், தந்தை பெரியார் தெருவை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜோதிஸ்ரீக்கும் (19), ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பாலமுருகன் (29) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாலமுருகனும் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து, "வீட்டிற்காக கடன் வாங்கி உள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி கொடு" என கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ தனது கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் அடைக்கலம் ஆனார். இந்நிலையில், ஏப்ரல் மாதம் 4்-ஆம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயிலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, முதல் மாடி அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்தார். இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.