உங்கள் பாதங்களை கண்ணீரால் கழுவுகிறேன் - மனம் உருகிய மிஷ்கின்.!

Continues below advertisement

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் நேற்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 62 வயதான ஜனநாதன் "இயற்கை" உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். நேற்று அவரது இறுதிச்சடங்கில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அருண் விஜய், மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் நேரில் சென்று தங்களுடைய இரங்கல்களை தெரிவித்தனர். 

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தன்னுடைய "லாபம்" படத்தின் Post Production பணிகளில் ஈடுபட்டிருந்தார் ஜனநாதன். மதிய உணவுவிற்காக தனது வீட்டிற்கு சென்ற நிலையில் தீடிரென்று தனது அறையில் மயக்கமுற்றுள்ளார். அதன் பிறகு தனது உதவியாளரால் சுயநினைவற்ற காணப்பட்ட அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.    

கடந்த சில நாட்களாக தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைபலனின்றி நேற்று காலமானார். நயன்தாரா, விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "என் அன்பு அண்ணா, தூய்மையான இதயத்தின் இருப்பிடமே, நீங்கள் எங்களின் பேரொளி. உங்கள் பாதங்களை என் கண்ணீரால் கழுவி முத்தம் பதிக்கிறேன். " என்று குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram