கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12-ந் தேதி முதல் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.
மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்
இதையடுத்து, சென்னை, அயனாவரத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவலக மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். கடந்த தேர்தலில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஆதி ராஜாராம் என்பவர் போட்டியிட உள்ளார். 9வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் 6 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.