Emmanuel Macron Call Trump : ’’HELLO டிரம்ப்..எப்படி இருக்கீங்க?’’ PHONE போட்ட பிரான்ஸ் அதிபர்
எப்படி இருக்கீங்க?
நான் எங்க இருக்கேனு தெரியுமா..
ரோட்டுல நிக்குறேன்
உங்களுக்காக ரோடு ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க
டிரம்ப்..உங்கனால ரோட்ல நிக்குறேன்..உங்க ஆளுங்க ரோட ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க என பிரன்ச் அதிபர் மாக்ரோன் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் நடுரோட்டில் நின்று கொண்டு போனில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு பிரென்ச் தூதரகத்துக்கு சென்று கொண்டிருந்தார் ஃப்ரென்ச் அதிபர் இமானுவேல் மாக்ரோன்..அப்போது நியூ யார்க் போலீசார் பிரன்ச் அதிபர் மாக்ரோனில் காரையும் தடுத்து நிறுத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்பின் வாகனம் செல்லும்போது சாலைகள் அனைத்தையும் முடக்குவது அங்கு வழக்கம். அதன்படி சாலையில் உள்ள அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தியதில் பிரன்ச் அதிபர் மாக்ரோனின் காரும் சிக்கியது.
வெகுநேரம் காத்திருந்து பின்னர் காரை விட்டு இறங்கி வந்தார் மாக்ரோன்.
போலீசாரிடம் தன்னை செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மாக்ரோனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட போலீஸ் அதிகாரி அவரை செல்ல அனுமதிக்கவில்லை. இதனைய்டுத்து அதிபர் மாக்ரோன் நேரடியாக ட்ரம்புக்கே போன் போட்டுவிட்டார்.
அந்த காலில், எப்படி இருக்கீங்க..நான் எங்க இருக்கேன் தெரியுமா..உங்கனால ரோட்ல நிக்குறேன் உங்க ஆளுங்க உங்களுக்காக் ரோட்ட ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க என ஜாலியாக பேசினார்.
இதனையடுத்தும் நிலைமை சீராகாததால் காரை விட்டுவிட்டு சுமார் 30 நிமிடம் நடைபயணமாக தூதரகத்திற்கு நடந்தே சென்றார் மாக்ரோன். இந்நிலையில் மாக்ரோன் ட்ரம்பிடம் போனில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.