நேபாள் வரிசையில் இந்தியா?பற்றி எரியும் பாஜக OFFICEஆக்ரோஷமான GEN Z-க்கள்
நேபாளை தொடர்ந்து லடாக்கிலும் ஜென் சீ போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்ணாவிரதத்தில் தொடங்கிய இந்த போராட்டம் வன்முறையாக உருமாறி லடாக்கில் பாஜக அலுவலகம் பற்றி எரிந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரியும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவனையில் லடாக்கை இணைக்க கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு மாநில அரசாக அறிவிக்கப்பட்ட போது லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. விரைவில் லடாக் மாநில அந்தஸ்தை பெரும் என வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட போதிலும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகியும் அவை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் லே உச்ச அமைப்பு என சொல்லப்படும் leh apex body மற்றும் கார்கில் டெமாக்ரெட்டிக் அலையன்ஸ் ஆகிய அமைப்புகள் தொடர் போராட்டம் அங்கு நடத்தி வருகிறது.
இந்நிலையில் leh apex body அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவர் ஒரு படையை திரட்டி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த இந்த போராட்டம், வன்முறையாக மாறியது தான் லடாக்கின் அமைதி இழப்புக்கு தற்போது மைய காரணமாக அமைந்துள்ளது
கடந்த 2 நாட்களுக்கு முன் உண்னாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று எல்ஏபி மற்றும் கேடிபி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை தடுக்க நினைத்த காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அதை மீறி ஒன்று கூட்டிய போராட்டக்காரர்கள் பேரணியை நடத்தினர். அப்போது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால் ஆத்திரமடைந்தனர்.இதன் எதிரொலியாக, பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டோர் பலரும் ஜென் சீ என சொல்லப்படும் இளம்தலைமுறையினர் என சொல்லப்படுகிறது. சோனம் வான்சுக்கின் வீடியோக்களே ஜென் சீ தலைமுறையினரை வீதிக்கு வரவழைத்தது என்கின்றனர். நேபாளில் சூடான் குருங் எப்படி இளைஞர்களை திரட்டி போராட்டத்தை வெடிக்க வைத்தாரோ அதையே தான் லடாக்கில் சோனம் செய்ய முயற்சிக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
இந்நிலையில் இந்த போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் தான் என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அமித் மால்வியா லடாக் போராட்ட வன்முறை காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதை தான் எதிர்பார்க்குறீர்களா ராகுல்? எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர் காங்கிரஸை சேர்ந்தவர் எனவும் சுட்டிக்காட்டி பாஜக அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேபாளத்தை தொடர்ந்து லடாக்கிலும் ஜென் சீ எனும் இளம்தலைமுறையினர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.