Madhampatti Rangaraj: ’வெட்கமா இல்லையா?'’வசமாக சிக்கிய ரங்கராஜ் மீண்டும் பற்றவைத்த ஜாய்
கடந்த சில நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி என சொல்லப்படும் ஜாய் கிரிஷில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வரும் நிலையில், மீண்டும் ரங்கராஜுடனான நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் ஜாய்
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஷில்டா கமிஷனர் அலுவலக்கத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் முறையாக விவாகரத்து பெறாமலேயே அவர் ஜாய் கிரிஷில்டாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஜாயும் ஏற்கனவே திருமணமாகி முறையாக விவாகரத்து பெற்றவர்.அவருக்கு ஓர் மகனும் இருக்கிறார். இந்நிலையில் தான் அவர் ரங்கராஜுடன் சென்னையில் தனியார் குடியிருப்பில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவரும் காதலித்து வருகிறார்கள் லிவினில் வாழ்ந்து வருகின்றனர் என்றெல்லாம் ரசிகர்கள் நினைத்து கொண்டிருக்க திடீரென ஜாய் கிரிஷில்டா ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.
இதனையடுத்து ரங்கராஜ் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார் ஜாய்