கரூர் மாவட்ட செயலாளர் ARREST! ஆக்‌ஷனில் இறங்கிய POLICE! புஸ்ஸி ஆனந்த், CTR நிலை என்ன?

Continues below advertisement

கடந்த 2 நாட்களாக தலைமறைவாக இருந்த தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமாரின் நிலை என்ன என்ற கேள்வி வந்துள்ளது.

கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. விஜய்யைப் பார்க்க வந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கரூர் துயர சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம், அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

குறிப்பாக கரூர் துயர சம்பவத்தில் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பிரச்சாரத்திற்கு 10000 பேர் வருவார்கள் என மதியழகன் எழுதி கொடுத்ததாகவும் ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் வந்துவிட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது. அதேபோல் மதியழகனும் கரூர் நிர்வாகிகளும் தொண்டர்களை ஒழுங்குபடுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்   குஜிலியம்பாறையில் வைத்து தனிப்படை  போலீசார் மதியழகனைக் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola