Rahul Gandhi Death Threat: ’’ராகுல் நெஞ்சில் குண்டு பாயும்’’TV LIVE-ல் கொலை மிரட்டல் பாஜககாரர் பகீர்
இந்தியாவில் ஜென் சீ போராட்டத்தை முன்னெடுக்க நினைத்தால், ராகுல் காந்தி யின் நெஞ்சில் குண்டுகள் பாயும் என பாஜக பேச்சாளர் பிரிண்டு மகாதேஷ் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தத்ற்காக மகாதேவ் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாஜக பேச்சாளர் பிரிண்டு மகாதேவ் பேசிய கருத்து கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. அப்போது பேசிய அவர், ஜென்சி போராட்டம் குறித்து பேசுகையில் பங்களாதேஷ் நடந்தது வேறு..அங்கு மக்கள் அரசுக்கு எதிராக இருந்தனர். இந்தியாவை பொறுத்தவரை அப்படி இல்லை..இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், பங்களாதேஷ் போன்ற ஒரு போராட்டத்தை இந்தியாவில் நடத்த முயற்சித்தால், ராகுல் காந்தியின் நெஞ்சில் குண்டுகள் பாயும். அப்படி ஒரு ஜென்சி போராட்டம் இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. அவை ராகுலுக்கு எதிராக தான் மாறும் அவர் சுட்டு வீழ்த்தப்படுவார் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் பிரிண்டு மகாதேவ்.
இதனையடுத்து காங்கிரஸ் தரப்பில் பிரிண்டு மகாதேவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மக்களவை எம்பி கேசி வேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பாஜக பேச்சாளர் பிரிண்டு மகாதேவ் ‘’இது வெறும் வார்த்தை ஜாலமோ அல்லது மிகைப்படுத்தலோ அல்ல. நீதிக்கான போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியருடனும் நிற்கும் ஒரு தலைவருக்கு இது ஒரு தீவிரமான மற்றும் திட்டமிட்ட கொலை மிரட்டல்.
இது சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும், ஒவ்வொரு குடிமகனுக்கும், ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்! ராகுல் ஜிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட பல அச்சுறுத்தல்களில் சமீபத்தில் பிரிண்டு விடுத்துள்ளது, பாஜகவின் நோக்கம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
எனவே காங்கிரஸ் கட்சியும் ஒட்டுமொத்த தேசமும் கோருவது:
பிரிந்து மகாதேவ் மீது மாநில காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக தலைமையிடமிருந்து ஒரு திட்டவட்டமான கண்டனமும் பொது மன்னிப்பும் கோர வேண்டும்.பாஜக அவ்வாறு செய்யத் தவறினால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இழிவான செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று தேசம் நம்புவதற்கு எல்லா காரணங்களும் அமையும் என வேணுகோபால் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.