Dr Shalini Support TVK Vijay | ”சிலுவையில் அறையப்பட்ட விஜய்! துரோகம்.. சூழ்ச்சி..” Dr ஷாலினி பகீர்

Continues below advertisement

விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார் என கரூர் சம்பவத்தை மேற்கோள் காட்டி மனநல மருத்துவர் ஷாலினி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். 

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கரூர் போலீஸார். இந்த நிலையில் நேற்று கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை  போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக எஸ்.பி. விசாரணை நடத்தினர். இந்த நடவடிக்கை தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பி உள்ளது.

இப்படிபட்ட சூழ்நிலையில் மனநல மருத்துவர் ஷாலினி விஜய்க்கு ஆதரவாக பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பேஸ்புக் பதிவில்,

விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது. என்று கொந்தளித்து இருக்கிறார் மருத்துவர் ஷாலினி
மேலும் அவர் கூறுகையில் In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!

இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான்.

மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல் இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola