ராஜ பரம்பரை TO எல்லாரும் ஒன்னு தவெகவில் இணைந்த தினகரன் பொறுப்பு கொடுத்த விஜய் Neeya Nana Dinakaran
நீயா நானா ஷோவில் தனது சாதியை ராஜபரம்பரை என பேசி பல ட்ரோல்களை சந்தித்து தவறான முடிவு எடுக்க சென்ற நான் சதிய மனநிலையில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும் தற்போது விஜயின் தவெகவில் இணைதிருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி நீயா நானா இதில் கடந்த 2020 ஆண்டு சாதி பெருமை பேசும் கிராமத்து இளைஞர்கள் விசஸ் அதை எதிர்க்கும் படித்த பட்டதாரி கிராமத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் சாதிய பெருமை பேசிய தினகரன் என்பவரின் வீடியோ வைரலானது.
அந்த நிகழ்ச்சியில் பேசியவர் எனக்கு என் சாதி பெருமையை பேசும் போது நெஞ்சநிமிர்த்தனும்னு தோணும் மீசைய முறுக்கணும்னு தோணும் கண்ணுல திமிரு ஒரு அகங்காரம் எல்லாமே தெரியும் ராஜபரம்பரையை சேர்ந்தவங்க அப்படி தான் இருப்போம் என்று தினகரன் பேசி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு அவர் ராஜநடை நடந்த வீடியோவை வைத்து உருவகேலியும் அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.
தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து அதே நீயாநானா நிகழ்ச்சியில் கலந்துக்கெண்ட அந்த இளைஞர் நான் தவறான முடிவு எடுக்க போய்விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.மேலும் பேசியவர் சாதியமனபான்மையில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும் அனைவரும் சமம் என்று புரிந்துக்கொண்டேன் என்றும் பேசி இருந்தாது அனைவரது பாராட்டுகளையும் பெற்று இருந்தார்.
இதனைத்தொடர்ந்து யூடியுபிற்கு பேட்டி அளித்த தினகரன் இந்த டிரோல்களுக்கு பிறகு என் நன்பர்கள் எல்லாம் என்னிடம் பேசுவது குறைந்து இதன் என் தவறை புரிந்துக்கொண்டேன்.. பின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து விளகி தவெகவில் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தவெகவில் கிளை செயளாரராக இருக்கேன். ட்விஜயின் தவெகவில் இணைந்த பிறகு நான் முழுசா மாறிட்டேன் என்று நெகிழ்ச்சியாக தினகரன் தெரிவித்துள்ளார்.





















