IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!
IPL 2026 RCB vs DC: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதியது. இதில் பவர்ப்ளேவிலே குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான வரலாற்றை டெல்லி படைத்துள்ளது.
ஆர்சிபி அபார பந்துவீச்சு:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவுக்கு மிகச்சிறந்த பலன் கிடைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆட்டத்தை தொடங்கிய பவர்ப்ளேவிற்குள் அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய ஷாகில் பாராக், கேஎல் ராகுல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ், அக்ஷர் பேட்ல, நிதிஷ் ராணா என 6 விக்கெட்டுகளை இழந்தது. ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் மாறி, மாறி தங்களது பந்துவீச்சு தாக்குதலை நடத்தினர்.
பவர்ப்ளேவிலே குறைந்த ரன்கள்:
இதையடுத்து, பவர்ப்ளேவான முதல் 6 ஓவரில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலே பவர்ப்ளேவில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ச ரன் இதுவே ஆகும்.
1. டெல்லி அணி - 13 ரன்கள் ( 6 விக்கெட்) ஆர்சிபிக்கு எதிராக
2. மும்பை இந்தியன்ஸ் - 17 ரன்கள் ( 2 விக்கெட்) பஞ்சாபிற்கு எதிராக (2015)
3. மும்பை இந்தியன்ஸ் - 21 ரன்கள் ( 3 விக்கெட்) பஞ்சாபிற்கு எதிராக ( 2016)
4. பஞ்சாப் கிங்ஸ் - 21 ரன்கள் ( 3 விக்கெட்) மும்பைக்கு எதிராக (2021)
5. கொல்கத்தா - 25 ரன்கள் ( 4 விக்கெட்) பஞ்சாப்பிற்கு எதிராக (2025)
மும்பை அணியிடம் இருந்த பவர்ப்ளேவில் குறைந்த ரன்கள் என்ற மோசமான சாதனை தற்போது டெல்லி வசம் சென்றுள்ளது.
ஹேசல்வுட், புவனேஷ்வர் அபாரம்:
பின்னர், டேவிட் மில்லர் - அபிஷேக் போரலின் ஆட்டத்தால் அவர்கள் மீண்டு வர முயற்சித்தாலும் 75 ரன்களுக்கு டெல்லி ஆல் அவுட்டானது. புவனேஷ்வர் 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா, ரஷீக் சலம் தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அபிஷேக் போரல் அதிகபடசமாக 33 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 19 ரன்களும், ஜேமிசன் 12 ரன்களும் எடுத்தனர். இவர்கள் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. சாஹில், சமீர் ரிஸ்வி, அக்ஷர் படேல் டக் அவுட்டானார்கள். கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள்.
மாற்றுத்திறன் அல்ல, மாபெரும் திறன்: சிங்கப்பூரில் ரன்கள் மழை குவித்த தஞ்சை பாலசுந்தர்!
ட்ரெண்டிங் செய்திகள்



















